பல கோடிக்கு தனது பிரம்மாண்ட வீட்டைவிற்ற அபிஷேக் பச்சன்- எத்தனை கோடிக்கு தெரியுமா?
பாலிவுட் சினிமாவில் மூத்த நடிகராக வலம் வருபவர் நடிகர் அமிதாப் பச்சன்.
இந்த வயதிலும் நல்ல கதையுள்ள படங்களாக தேர்வு செய்து நடிக்கிறார், கொரோனாவாலும் இடையில் தாக்கப்பட்டார்.
அவரது மகன், மருமகள் என குடும்பத்தில் இருப்பவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்கள், இதனால் அவரது ரசிகர்கள் கடும் வருத்தம் அடைந்தார்கள்.
இப்போது அவரது மகன் அபிஷேக் பச்சன் குறித்து ஒரு தகவல் வலம் வருகிறது. அதுஎன்னவென்றால் மும்பையில் தனது ரூ. 41.14 கோடி மதிப்புள்ள தனது வீட்டை ரூ. 45 கோடிக்கு விற்றுள்ளாராம்.
அண்மையில் நடிகர் அபிஷேக் பச்சன் தனது மனைவி நடிக்கும் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பிற்காக அவருடனே பாண்டிச்சேரி வந்திருந்தார்.
அங்கு அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், ஆராத்யா என 3 பேருடனும் நடிகர் சரத்குமார் மற்றும் அவரது மகள்கள் புகைப்படம் எடுத்திருந்தனர்.