கர்ப்பமாக இருக்கும் அபியும் நானும் சீரியல் நடிகை அகிலா.. தினமும் நடக்கும் வளைகாப்பு
நிகழ்ச்சி தொகுப்பாளராக சின்னத்திரையில் அறிமுகமான அகிலா, பின் சீரியல்களில் நடிக்க துவங்கினார். இவருடைய முதல் சீரியல் செல்வி ஆகும். இதன்பின் முள்ளும் மலரும், அபூர்வ ராகங்கள், ரோஜாக்கூட்டம், சிவசக்தி, கோலங்கள், திருமதி செல்வம், இளவரசி, உதிரிப்பூக்கள், கல்யாண பரிசு, சக்தி, அழகு என பல சீரியல்களில் நடித்து வந்தார்.
இந்நிலையில், கர்ப்பமாக இருக்கும் நடிகை அகிலா சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது குடும்பன் மற்றும் வளைகாப்பு குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.
அவர் கூறியதாவது,
வளைகாப்பு
"கர்ப்பமாக இருந்ததால் ஒருவருக்கு ஒருமுறைதான் வளைகாப்பு நடக்கும். ஆனால், எனக்கு தினமும் வளைகாப்புதான். சீரியலில் என்னுடன் நடித்த பல நடிகைகள், எனக்கு தினம் தினம் வளைகாப்பு நடத்தி வருகிறார்கள்.
அபியும் நானும் சீரியலில் நடித்த முகில் என சிறுவனின் அம்மா என் மீது அளவு கடந்த பாசம் வைத்துள்ளார். அவர் வளைகாப்பு செய்யும்போது அனைத்து நகைகளும் அவர்தான் கொண்டு வந்தார்.
கோலங்கள் சீரியலில் எனக்கு அம்மாவாக நடித்த பாரதி அம்மாவும் எனக்கு வளைகாப்பு நடத்தினார். எனக்கு 27வயதில் ஒரு பொண்ணு இருக்கா. அவள் பெயர் அஸ்வதி. மலர் சீரியலில் ஹீரோயின் அவள்தான். அவளும் எனக்கு நண்பர்களுடன் சேர்ந்து வளைகாப்பு செய்தார்".
குடும்பம்
"எனது குடும்பம் என்பது என்னுடைய தனிப்பட்ட விருப்பம். அதை வெளியுலகில் உள்ள யாரும் தெரிந்துகொள்ள நான் விரும்பவில்லை. அதனால்தான் சமூக வலைத்தளங்களில் எனது குடும்பம் குறித்து எந்த ஒரு பதிவும் நான் வெளியிடவில்லை. என் குடும்பத்தினருக்கும் அது பிடிக்கவில்லை.
அதே சமயம், எனக்கு நடிப்பு வாழ்க்கையில் எனது குடும்பத்தினர் சப்போர்ட் அதிகம். நான் மருத்துவர் ஆக வேண்டும் என விரும்பினேன். அப்போதுஎன்னால் முடியவில்லை, என்பதால் இப்போது அகாடமி டாக்டர் ஆக முயற்சித்து வருகிறேன்.
வேல்ஸ் யுனிவெர்சிடில் பி.எச்.டி பண்றேன். என் கணவர் எனக்கு எல்லா வகையிலும் துணையாக இருக்கிறார். உங்க வீட்டில் டாக்டர் ஆக்க வேண்டும் என்று நினைத்தது நடக்கவில்லை. அதனால் நீ இப்படி டாக்டர் பட்டம் வாங்கிவிடு என சொல்லி அவர்தான் என்னை பி.எச்.டி அடிக்க வைக்கிறார். கர்ப்பமாக இருந்தாலும், அவர்தான் என்னை அழைத்து சென்று மீண்டும் வீட்டுக்கு கூட்டி வருகிறார்" என அகிலா கூறியுள்ளார்.

நேருக்கு நேர் மோதவிருந்த விமானங்கள்: 300 அடி கீழ் நோக்கி பாய்ந்த விமானம்! திக் திக் நொடிகள்! News Lankasri
