பிக் பாஸ் சீசன் 5 அபிநய், எந்த இரண்டு முக்கிய போட்டியாளர்களை சந்தித்துள்ளார் பாருங்க..
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய நிகழ்ச்சியான பிக் பாஸ் சீசன் 5, தற்போது இறுதி போட்டியை நெருங்கி வருகிறது.
அந்த வகையில் தற்போது பிக் பாஸ் வீட்டில் டிக்கெட் டு பைனல் டாஸ்க் நடந்து வருகிறது, இதில் வெற்றி பெற்று யார் முதலில் இறுதி போட்டிக்கு செல்வார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
மேலும் நேற்று பிக் பாஸ் வீட்டில் இருந்து கமல் இரண்டு முக்கிய போட்டியாளர்களை வெளியேற்றி இருந்தார். அதுவும் வருண் மற்றும் அக்ஷரா ஒரே நேரத்தில் வெளியேறியது இந்த சீசனின் முக்கிய நிகழ்வாக பார்க்கப்பட்டது.
இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து முன்னதாக வெளியேறிய போட்டியாளர்கள் தான் அபிநய், சுருதி, மதுமிதா.
மேலும் தற்போது இவர்கள் மூவரும் சந்தித்து கொண்டுள்ளனர். அப்போது அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படமும் தற்போது இணையத்தில் பரவி வருகிறது. இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்..