நீங்க மட்டும் வந்துடாதீங்க, என் தொழில் கெட்டுடும்: அபிஷேக் ராஜா யாரை பார்த்து இப்படி பயப்படுறாரு?
திரைப்பட விமர்சனங்கள் மூலமாக பாப்புலர் ஆன அபிஷேக் ராஜா பிக் பாஸ் 5ம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டார். அவர் வீட்டுக்குள் முதலில் மூன்று வாரங்கள் மட்டுமே இருந்தார். மற்ற போட்டியாளர்களை விளையாட விடாமல் influence செய்கிறார் என அவர் மீது கடும் விமர்சனம் எழுந்தது. அதனால் மூன்றாம் வார இறுதியில் எலிமினேட் செய்யப்பட்டார்.
மீண்டும் வைல்டு கார்டு எண்ட்ரியாக வந்த அபிஷேக் ராஜா இரண்டு வாரங்கள் வீட்டுக்குள் இருந்தார். நேற்று தான் அவர் இரண்டாவது முறையாக எலிமினேட் செய்யப்பட்டார்.
வெளியில் வந்த அவர் கமல் முன்னிலையில் மற்ற போட்டியாளர்களுடன் அகம் டிவி வழியே பேசினார். அப்போது மற்றொரு வைல்டு கார்டு என்ட்ரி ஆன சஞ்சீவை பார்த்து அபிஷேக், "சஞ்சீவ் சார், நான் உங்க reviewக்கு நான் பெரிய ஃபேன். தயவு செஞ்சி review பண்ண ஆரம்பிச்சிடாதீங்க, என் தொழில் கெட்டுடும்" என கூறி இருக்கிறார்.
பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கும் போட்டியாளர்கள் எல்லோரையும் பற்றி ஆரம்பதில் இருந்தே விமர்சித்து வரும் சஞ்சீவ் மிக சரியாக பேசுகிறார் என கமல்ஹாசனே இதற்கு முன்பு பாராட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.