கண்ணீர் விட்டு அழுத அபிஷேக் ராஜா.. என்ன ஆச்சு? BB ஜோடிகள் லேட்டஸ்ட் ப்ரொமோ
விஜய் டிவியின் பிக் பாஸ் ஷோவில் பங்கேற்ற போட்டியாளர்கள் பங்கேற்கும் நடன நிகழ்ச்சியான பிக் பாஸ் ஜோடிகள் ஷோ தற்போது இரண்டாவது சீசனாக ஒளிபரப்பாகிறது.
அதில் போட்டியாளராக கலந்துகொண்டிருக்கும் அபிஷேக் ராஜா கண்ணீர் விட்டுஅழுதிருக்கிறார்.
யாருக்காவது மன்னிப்பு கேட்க வேண்டும் என்றால் கேட்கலாம் என செண்டிமெண்ட் ட்ராக்கில் ஒரு கேள்வி கேட்க, அப்போது பேசிய அபிஷேக் ராஜா தனது அப்பா பற்றி பேசினார்.
"எனது திருமண வாழ்க்கையில் சில பிரச்சனைகள் இருந்தது, அதனால் எனது அப்பாவுக்கு நேரம் கொடுக்க முடியவில்லை. ஒருமுறை எனக்கு போன் செய்து தன்னை வந்து பார்த்துவிட்டு போகும்படி கூறினார். அப்போது நான் திருட்டுத்தனமாக கூட மதுரைக்கு சென்று பார்த்துவிட்டு வந்திருக்கலாம். ஏழாவது நாளில் அவர் இறந்துவிட்டார். அவருக்கு சாரி" என சொல்லி அபிஷேக் ராஜா கண்ணீருடன் பேசி இருக்கிறார்.