3 வாரம் பிக்பாஸ் 5வது சீசன் வீட்டில் இருந்த அபிஷேக்கின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
பிக்பாஸ் 5வது சீசன் பெரிய எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையில் தொடங்கியது. நிகழ்ச்சி இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.
சில சண்டைகள், சலசலப்பு என வீட்டில் போட்டியாளர்கள் இடையே ஏற்பட்டு வருகிறது. முதலில் நாடியா வீட்டில் இருந்து வெளியேறினார், இரண்டாவதாக அபிஷேக் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.
அவர் இவ்வளவு சீக்கிரம் வெளியேறுவார் என்று அவரே எதிர்ப்பார்த்திருக்க மாட்டார், ஆனால் மக்களின் முடிவு அவரை வீட்டில் இருந்து வெளியேற்ற வேண்டும் என இருக்கிறது.
பிக்பாஸ் வீட்டில் அபிஷேக் 3 வாரங்கள் இருந்துள்ளார், அவருக்கு ஒரு வார சம்பளம் மட்டும் ரூ. 1.75 லட்சமாம். 3 வாரங்கள் சேர்த்து அவர் ரூ. 5. 25 லட்சம் சம்பளம் பெற்று வீட்டைவிட்டு வெளியேறி இருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால் இந்த சம்பள விவரம் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.