சமூகவலைத்தளங்கள் மூலம் வீடியோக்களை பதிவிட்டு பிரபலமானவர்கள் வரிசையில், யூடியூப் பிரபலங்களும் பெரும்பாலானோர் இருக்கிறார்கள். ரசிகர்களை அதிகம் கவருவது சினிமா நட்சத்திரங்களையும் தாண்டி, தற்போது Youtube பிரபலங்கள் தான். அதே போல் Youtube-ல் இருந்தும் சினிமாவில் பலரும் இதுவரை என்ட்ரி கொடுத்துள்ளனர்.
ABN Abian Achu
யூடியூப்பில் பல வீடியோக்களை பகிர்ந்து பிரபலமான ABN அச்சு. இந்த யூடியூப்பை நடத்தி வரும் அச்சு, ஆரம்பத்தில் டேர் எனப்படும் சவால்களை செய்யும் வீடியோக்களை பதிவிட்டு வந்தார். மேலும் ரசிகர்கள் கமெண்ட் செக்ஷனில் பதிவிடும் கருத்துக்களை படித்து, அவர் சொல்லுவதை செய்தும் வருகிறார்.
இதனை தொடர்ந்து சுடுகாட்டிற்கு செல்வது, பயமுள்ள இடங்களுக்கு செல்வது என்று பல வீடியோக்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார். சமீபத்தில் கூட, சுடுகாடு மற்றும் அபாயகரமான இடத்திற்கு சென்று வீடியோக்களை எடுத்து பகிர்ந்திருந்தார்.
1.27 மில்லியன் சப்ஸ்கிரைப்களை வைத்து ABN அச்சு, இதுவரை 755 வீடியோக்களை தனது யூடியூப் சேனலில் பகிர்ந்து லட்சக்கணக்கில் சம்பாதித்து வருகிறார். மேலும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பல சோசியல் மீடியா பக்கங்களில் ஆக்டிவாக இருந்து ரசிகர்கள் ரசிக்கும் படியான புகைப்படங்கள், வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.
நெட் ஒர்த்
அப்படி யூடியூப் வீடியோக்களை பகிர்ந்து ஒரு மாதம் $ 20.6K வருமானமாக பெற்று வருகிறார். 2023ல் இருந்து யூடியூப் சேனல் நடத்தி வரும் ABN Achu-வின் net worth, $ 173K - $ 1.04M இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

பிடிவாதத்தால் எதையும் சாதிக்கும் பெண் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
