ஓட்டுக்கு பணம் கொடுத்தா வாங்கிக்கோங்க, அது யார் பணம்? விஜய் ஆண்டனி சொன்ன அட்வைஸ்

By Parthiban.A Apr 07, 2024 04:30 PM GMT
Report

நாடாளுமன்ற தேர்தல் வரும் 19ம் தேதி தமிழ்நாட்டில் நடக்க இருக்கிறது. அதற்கான பிரச்சாரத்தில் அனைத்து கட்சிகளும் ஈடுபட்டு வருகின்றன. நடிகர் விஜய்யும் கட்சி தொடங்கி இருக்கும் நிலையில், அவர் இந்த தேர்தலில் போட்டியில்லை என ஏற்கனவே அறிவித்துவிட்டார்.

இந்நிலையில் நடிகர் விஜய் ஆண்டனி சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது அவரும் விஜய் அரசியலுக்கு வந்தது பற்றி கேட்கப்பட்டது.

"17 வயதில் இருந்து அவர் நடித்து வருகிறார். ஏற்கனவே உச்சத்தையும் தொட்டுவிட்டார் அவர். தனக்காக செய்த மக்களுக்கு ஏதாவது திரும்ப செய்ய வேண்டும் என அவர் நினைத்து தான் அரசியலுக்கு வந்து இருக்கிறார்" என விஜய் ஆண்டனி கூறி இருக்கிறார்.

ஓட்டுக்கு பணம் கொடுத்தா வாங்கிக்கோங்க, அது யார் பணம்? விஜய் ஆண்டனி சொன்ன அட்வைஸ் | Accept Money For Vote But Vijay Antony Advice

ஓட்டுக்கு பணம் கொடுத்தால்..

மேலும் பேசிய விஜய் ஆண்டனி "ஓட்டுக்கு பணம் கொடுத்தால் அதை வாங்கிக்கோங்க. கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு அது உதவும். அது உங்களுடைய பணம் தான்."

"ஆனால் ஓட்டை மட்டும் மனசாட்சிப்படி போடுங்க. காசு கொடுத்தார் என்பதற்காக போடாதீங்க" என அவர் கூறி இருக்கிறார்.  

ஓட்டுக்கு பணம் கொடுத்தா வாங்கிக்கோங்க, அது யார் பணம்? விஜய் ஆண்டனி சொன்ன அட்வைஸ் | Accept Money For Vote But Vijay Antony Advice

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US