இரண்டு நாட்களில் ஏஸ் திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
ஏஸ்
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் இந்த ஆண்டு வெளிவந்துள்ள முதல் திரைப்படம் ஏஸ். இப்படத்தை இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கியுள்ளார். மேலும் அவரே இப்படத்தை தயாரித்துள்ளார்.
இதற்கு முன் இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் படத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்தார். அதை தொடர்ந்து ஏஸ் திரைப்படத்திற்காக மீண்டும் இந்த கூட்டணி இணைந்துள்ளது.
இப்படத்தில் நடிகை ருக்மிணி வசந்த் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் எண்ட்ரி கொடுத்துள்ளார். மேலும் பப்லு, அவினாஷ், திவ்யா பிள்ளை, யோகி பாபு என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.
வசூல்
சுமாரான வரவேற்பை பெற்றிருக்கும் ஏஸ் திரைப்படம் முதல் நாளே குறைவான வசூலை பெற்றது. இந்த நிலையில், இரண்டு நாட்களில் இப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் இரண்டு நாட்களில் ரூ. 3.2 கோடி வசூல் செய்துள்ளது.

பாக்., சீனாவுக்கு கவலையளிக்கும் செய்தி - Tejas MK1 போர் விமானங்களை மேம்படுத்தும் இந்தியா News Lankasri

குடும்ப உறுப்பினர்களுக்கு ஆபத்து வந்து விடுமோ என்ற அச்சம் - திமுகவை காட்டமாக விமர்சித்த விஜய் IBC Tamilnadu

இந்திய போர் விமானங்களை வீழ்த்த பாகிஸ்தான் பயன்படுத்திய J-10C., சீனா வெளியிட்ட ஆவணப்படம் News Lankasri
