படுதோல்வியடைந்த விஜய் சேதுபதியின் ஏஸ் திரைப்படம்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரம்
ஏஸ்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் ஏஸ். இப்படத்தை இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கியிருந்தார்.
இதற்கு முன் இவர்கள் கூட்டணியில் 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' என்கிற திரைப்படம் வெளிவந்தது. இதன்பின் மீண்டும் ஏஸ் திரைப்படத்திற்காக இணைந்து பணியாற்றியுள்ளனர். இப்படத்தை இயக்கியது மட்டுமின்றி அவரே இப்படத்தை தயாரித்துள்ளனர்.

கன்னடத்தில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகை ருக்மிணி வசந்த் இப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இது அவருடைய முதல் தமிழ் திரைப்படமாகும். மேலும் அவினாஷ், யோகி பாபு, திவ்யா பிள்ளை என பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
வசூல்
கடந்த 23ம் தேதி திரைக்கு வந்த இப்படத்திற்கு மக்கள் மத்தியில் பெரிதளவில் வரவேற்பு கிடைக்கவில்லை. படமும் சுமாராகதான் உள்ளது என மக்கள் விமர்சனம் தெரிவித்தனர்.

இந்த நிலையில், இதுவரை ரூ. 6.9 கோடி மட்டுமே பாக்ஸ் ஆபிஸில் இப்படம் வசூல் செய்துள்ளது. இதன் மூலம் இப்படம் படுதோல்வியை சந்தித்துள்ளது.
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri