தொலைக்காட்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போகும் பிக்பாஸ் புகழ் ஆரி- எந்த டிவி நிகழ்ச்சி பாருங்க
நடிகர் ஆரி
தமிழ் சினிமாவில் நடிக்க தொடங்குவதற்கு முன்பு திரையரங்குகளில் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு அதன்பின் உடற்பயிற்சியாளராக பணிபுரிந்தவர் நடிகர் ஆரி.
2005ம் ஆண்டு அலை அடிக்குது என்னும் படத்தில் சிறு வேடத்தில் தலைகாட்டினார். அதன்பின் தாமிராவின் இயக்கத்தில் பாரதிராஜா மற்றும் பாலச்சந்தர் நடித்த ரெட்டைச்சுழி படத்தில் ஹீரோவாக நடித்தார்.
அதன்பின் சில படங்கள் நடித்தாலும் நெடுஞ்சாலை படம் அவருக்கு பெரிய ரீச் கொடுத்தது. அதன்பின் நதியா என்ற ஈழத்துப் பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார், இவர்களுக்கு ரியா மற்றும் ரணதீரன் என்னும் இரு குழந்தைகள் உள்ளனர்.
2020ல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 4வது சீசனில் கலந்துகொண்டு அதிக மக்களால் கவனிக்கப்பட்டார்.
புதிய ஷோ
அதன்பின் அவரது நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் வரும் என்று பார்த்தால் வேறொரு தகவல் வந்துள்ளது. அதாவது நடிகர் ஆரி ஒரு புதிய நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறாராம்.
கலைஞர் டிவியில் ஒளிபரப்பாக போகும் வா தமிழா வா என்ற நிகழ்ச்சியை கரு. பழனியப்பன் அவர்களுக்கு பதிலாக தொகுத்து வழங்க இருக்கிறார்.

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri

Baakiyalakshmi: தூக்கி வீசப்பட்ட மாமனார் புகைப்படம்! சுதாகருக்கு பாக்கியா விடுத்த எச்சரிக்கை Manithan
