கழிவறை சுத்தம் செய்த நடிகர் அப்பாஸ்.. என்ன காரணம் தெரியுமா? இதோ
அப்பாஸ்
90ஸ் காலகட்டத்தில் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட நாயகர்களின் ஒருவர் அப்பாஸ். இவர் 1996ஆம் ஆண்டு வெளிவந்த காதல் தேசம் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.
இதன்பின் தொடர்ந்து படங்களில் நடித்து வந்த அப்பாஸ் சூப்பர்ஸ்டார் ரஜினி, உலகநாயகன் கமல் போன்ற முன்னணி நட்சத்திரங்களுடன் கூட நடித்து வந்தார். இவர் கடைசியாக மலையாளத்தில் வெளிவந்த பச்சக்கள்ளம் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
1997ஆம் ஆண்டு எரும் அலி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். தனது குடும்பத்துடன் வெளிநாட்டில் தற்போது செட்டிலாகிவிட்டார் அப்பாஸ்.
கழிவறை சுத்தம் செய்தேன்
இந்த நிலையில், நடிகர் அப்பாஸ் தனது வாழ்க்கையில் நடந்த சில விஷயங்கள் குறித்து பேட்டி ஒன்றில் வெளிப்படையாக பேசினாராம்.
இதில் அவர் "சினிமாவில் பிசியாக நடித்துக்கொண்டிருந்த நேரத்தில் சில பிரச்சனைகள் ஏற்பட்டது. அதனால் பட வாய்ப்புகளும் குறைந்தது. அப்போது என் குடும்பத்திற்கு உதவ வேண்டும் என்பதற்காக பைக் மெக்கானிக்காக வேலை செய்துள்ளேன். அதுமட்டுமின்றி கழிவறை சுத்தம் செய்தேன். மேலும் டாக்சி டிரைவராகவும் நியூசிலாந்தில் வேலை செய்துளேன்" என கூறினார்.
திரையுலகில் உச்சத்தில் இருந்த அப்பாஸ், தனது வாழ்க்கையில் நடந்த விஷயங்கள் குறித்து பேசியது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

வெளிநாட்டவர்களில் சிலரது பாஸ்போர்ட்களை ரத்து செய்யும் வகையில் சட்டத்தில் மாற்றங்கள்: ஜேர்மனி திட்டம் News Lankasri
