இயக்குநர் பாலாவை நம்பினேன் ஆனால்.. சாட்டை பட நடிகர் அஜ்மல் கான் வேதனை
அஜ்மல் கான்
கடந்த 2012 -ம் ஆண்டு அன்பழகன் இயக்கத்தில் வெளிவந்த சாட்டை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகர் யுவன் என்ற அஜ்மல் கான். இப்படத்தை தொடர்ந்து கமர்கட்டு, கீரிப்புள்ள போன்ற படங்களில் நடித்துள்ளார்.
யுவனின் தந்தை ஒரு தொழிலதிபர் ஆவர். யுவன் ஒரு சில திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கிறார். அதன் பின், சினிமாவில் இருந்து காணாமல் போனார்.

வேதனை
இந்நிலையில், யுவன் பேட்டி ஒன்றில் பேசிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில், "நான் இதுவரை 13 படம் நடித்திருக்கிறேன். ஆனால் யாரும் என்னை கண்டுகொள்ளவில்லை.
சினிமாவில் லக் இருந்தால் தான் ஜெயிக்க முடியும் என்பதை நான் பின்பு தான் தெரிந்து கொண்டேன். சாட்டை படம் நல்ல படம் ஆனால், அந்த படத்திற்கு பின் நான் நடித்து முடித்த படங்கள் எதுவும் இன்னும் ரிலீஸ் ஆகாமல் இருக்கிறது.
சாட்டை படத்திற்கு பின் நான் பாலா படத்தில் நடிக்க கமிட் ஆனேன். இந்த படத்தின் கதாபாத்திரத்திற்கு ஏற்ப நாக்பூர் சென்று பரோட்டா போட கத்துக்கொண்டேன். அதுமட்டுமின்றி, உடம்பை போட்டு தாடி வளர்த்து பயங்கரமான உடல் உழைப்பை செலுத்தினேன்.

படத்தின் புரோமோஷனுக்காக போட்டோக்களை எடுத்து பாலா வெளியிட்டார். படம் எடுப்பதாக அறிவிப்பும் வெளியான நிலையில், தீடீரென படம் டிராப் ஆனது.
இந்த படத்தில் நடிக்க மிகவும் எதிர்பார்த்த இருந்த எனக்கு இன்று வரை ஏன் அந்த படம் டிராப் ஆனது என்பது குறித்து தெரியவில்லை. இந்த விரக்தியால் தான் நான் சினிமாவில் இருந்து விலகினேன்" என்று தெரிவித்துள்ளார்.
 
                 
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    