என்னுடன் பணியாற்ற யாரும் விரும்பவில்லை.. ராயன் பட நடிகர் வருத்தம்
சந்தீப் கிஷன்
தமிழில் யாருடா மகேஷ் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் சந்தீப் கிஷன். அதன் பின், இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாநகரம் படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார்.
அண்மையில் தனுஷ் நடித்த கேப்டன் மில்லர் மற்றும் ராயன் போன்ற படங்களிலும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.
வருத்தம்
இந்நிலையில், சந்தீப் பெரிய தயாரிப்பாளர்கள் யாரும் என்னுடன் பணியாற்ற விரும்பவில்லை என்று கூறிய விஷயம் தற்போது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதில், "கடந்த வருடம் நான் நடித்து வெளிவந்த ராயன் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது. இந்த ஆண்டு எனது நடிப்பில் 'மசாக்கா' என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.
அதனைத்தொடர்ந்து, சஞ்சய்யுடன் ஒரு படத்தில் நடிக்கிறேன். முன்பு நான் ஒரு சவாலான கட்டத்தில் இருந்தேன். அப்போது பல தயாரிப்பாளர்களை அணுகினேன்.
ஆனால் என்னுடன் அவர்கள் பணியாற்ற விரும்பவில்லை. அவர்கள் என்னை நடத்திய விதம், என்னைப் பார்த்த விதம் மிகவும் மோசமாக இருந்தது. இன்று வரை அதற்கு என்ன காரணம் என்று எனக்குத் தெரியவில்லை" என்று கூறியுள்ளார்.