தங்கை திருமணம், விஜய் சேதுபதி செய்த செயல் .. லவ்வர் புகழ் மணிகண்டன் ஓபன்
மணிகண்டன்
தமிழ் திரையுலகில் தற்போது வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் மணிகண்டன். இந்த தலைமுறை ரசிகர்களை கவரும் வண்ணம் இவருடைய நடிப்பு வலம் வருகிறது.
விக்ரம் வேதா, காலா ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்த இவர், ஜெய் பீம் படத்தின் மூலம் சிறந்த நடிகர் என அனைவராலும் பாராட்டப்பட்டார்.
மேலும் குட் நைட் படம் இவருக்கு மாபெரும் வரவேற்பை மக்களிடையே ஏற்படுத்தியது. கடந்த ஆண்டு வெளிவந்த 'லவ்வர்' படமும் இளைஞர்களை கவர்ந்தது.
இந்நிலையில், பேட்டி ஒன்றில் மணிகண்டன் நடிகர் விஜய் சேதுபதி குறித்து பேசிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
செய்த உதவி
அதில், "காதலும் கடந்து போகும் என்ற படத்தின் மூலம் தான் விஜய் சேதுபதியிடம் தனியாக பேசும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அந்த வாய்ப்பையும் மழை தான் எனக்கு ஏற்படுத்தி கொடுத்தது.
ஆனால், மழை நின்ற பின்பும் அவர் என்னிடம் நீண்ட நேரம் பேசிக்கொண்டு தான் இருந்தார். அதை தொடர்ந்து, நான் கூறாமலே என்னுடைய தங்கையின் சிறிய அளவிலான ஆபரேஷனுக்கு முன் வந்து உதவினார்.
அது மட்டுமின்றி, என் தங்கையின் திருமணத்திற்கு நான் முறையாக அழைக்காதபோதும் அவர் நேரில் வந்து மணமக்களை வாழ்த்தி என் கையில் போகும்போது ரூ. 3 லட்சம் கொடுத்து விட்டு சென்றார். அந்த பணம் இல்லை என்றால் நான் மேலும் கடன் வாங்கும் நிலைமை ஏற்பட்டிருக்கும்" என்று கூறியுள்ளார்.

ஒரே மேடை, ஒரே நாள், ஒரே நேரத்தில் அக்கா-தங்கை திருமணம் - ஆனால், இறுதியில் நேர்ந்த சம்பவம்! IBC Tamilnadu
