சன் டிவியின் ஹிட் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகர் அப்சர்.. எந்த தொடர்?
சன் டிவி
90களில் தமிழ் சின்னத்திரையில் கலக்கிய நடிகர்களில் ஒருவர் தான் அப்சர்.
தாமரை, உறவுகள் சங்கமம், என் இனிய தோழியே, அகல்யா, நிம்மதி உங்கள் சாய்ஸ், செல்வி, பொம்மலாட்டம், பைரவி ஆவிகளுக்கு பிரியமானவள் என்ற பல சீரியல்களில் நடித்திருக்கிறார்.

அதிலும் சன் டிவியில் வெற்றிகரமாக ஓடிய பாண்டவர் இல்லம் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் பாராட்டை பெற்றார். இவர் பிரபல நடிகை இந்திரஜாவை திருமணம் செய்துகொண்டார், இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.
புது சீரியல்
பாண்டவர் இல்லம் சீரியலுக்கு பிறகு எந்த தொடரிலும் கமிட்டாகாமல் இருந்த அப்சர் தற்போது சன் டிவி சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன் சன் டிவியில் வினோதினி என்ற தொடர் ஒளிபரப்பாக தொடங்கியது. கணவர் இல்லாத வினோதினி தனது மகன், மகளை காப்பாற்றும் ஒரு பொறுப்பான அம்மாவாக இருக்கும் கதையை நோக்கியது இந்த தொடர்.
இந்த தொடரில் அப்சர் மற்றும் நடிகை துர்கா என்ட்ரி கொடுத்துள்ளனராம், இதோ படப்பிடிப்பு தள போட்டோ,