நடிகை ஐஸ்வர்யா பாஸ்கரனின் வாழ்க்கை வரலாறு!! இதோ
ஐஸ்வர்யா பாஸ்கரன்
பிரபல நடிகை லட்சுமியின் மகள் என்ற அடையாளத்தோடு சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை ஐஸ்வர்யா பாஸ்கரன்.
இவர் தமிழ் படங்களை தாண்டி மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற மொழி படங்களிலும் நடித்துள்ளார்.
சினிமா வாழ்க்கை
ஐஸ்வர்யா பாஸ்கரன், கடந்த 1991 -ம் ஆண்டு வெளியான ஒலியம்புகள் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இதனை அடுத்து மாமகரு, ராசுக்குட்டி, மீரா, கார்திஷ் போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்தார். இதன் பின் சில தனிப்பட்ட காரணத்தால் சினிமாவில் இருந்து முற்றிலும் விலகிவிட்டார்.
கடந்த 1999 -ம் ஆண்டு ஆர். பார்த்திபன் இயக்கத்தில் வெளிவந்த ஹவுஸ்புல் படத்தின் மூலம் ஐஸ்வர்யா மீண்டும் சினிமாவில் கம்பேக் கொடுத்தார். இந்த படத்திற்கு பின் இவர் பல படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்தார்.
ஐஸ்வர்யா பாஸ்கரன் இந்த ஆண்டு கவின் நடிப்பில் வெளியான டாடா படத்தில் முக்கியமான ரோலில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
தனிப்பட்ட வாழ்க்கை
ஐஸ்வர்யா பாஸ்கரன் தன்வீர் அகமது என்பவரை 1994 இல் திருமணம் செய்து கொண்டார் ஆனால் இவர்களுக்குள் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடு காரணமாக1996 இல் விவாகரத்து பெற்றனர். தம்பதியருக்கு ஒரு மகள் உள்ளார்.