எனக்கு ஆரோக்கியத்தில் இப்படியொரு பிரச்சனை உள்ளது... ஓபனாக கூறிய அஜித்
நடிகர் அஜித்
நடிகர் அஜித், தமிழ் சினிமா பெருமையாக கொண்டாடும் ஒரு முன்னணி பிரபலம்.
இவரது படங்கள் ரிலீஸ் என்றாலே தமிழ்நாடு திருவிழா கோலமாக இருக்கும். 2025ம் ஆண்டு தொடங்கியதும் அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் வெளியாகி இருந்தது, ஆனால் படம் சரியாக ஓடவில்லை.
அப்படத்தை தொடர்ந்து அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் குட் பேட் அக்லி, அந்த படத்தை ரசிகர்கள் பெரிய அளவில் கொண்டாடினார்கள், அதோடு பாக்ஸ் ஆபிஸில் செம கலெக்ஷன் செய்தது.
பேட்டி
தற்போது அஜித், துபாய், பெல்ஜியம் நாடுகளைத் தொடர்ந்து ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் கார் பந்தயத்தில் பங்கேற்று வருகிறார். அப்போது ஆங்கில பத்திரிக்கை ஒன்றிற்கு அஜித் பேட்டி அளித்துள்ளார்.
அதில் அவர் பேசும்போது, எனக்கு திரைப்படங்கள் வெப் சீரியஸ்கள் பார்க்கும நேரம் எதுவும் கிடையாது, விமானத்தில் பயணிக்கும் போது மட்டுமே எனக்கு தூங்க நேரம் கிடைக்கிறது.
அதுமட்டுமில்லாமல் எனக்கு தூக்கப் பிரச்சனையும் உள்ளது, எனக்கு தூங்குவதற்குச் சிரமமாக இருக்கும். அப்படியே தூங்கினாலும், அதிகபட்சம் 4 மணி நேரம்தான் தூங்குவேன் என்று கூறியிருக்கிறார்.