புதிய மாஸ் காரை வாங்கியுள்ள நடிகர் அஜித், ஷாலினி வெளியிட்ட போட்டோ... எத்தனை கோடி தெரியுமா?
நடிகர் அஜித்
கார் மீது ஆசைப்படும் பிரபலங்கள் பலர் உள்ளார்கள், அப்படி தமிழ் சினிமாவில் முதலில் யோசித்தால் நமக்கு முதலில் நியாபகம் வருவது நடிகர் அஜித் தான்.
கார் ரேஸ், பைக் போன்றவற்றில் அதிக ஆர்வம் கொண்டவர் இப்போது வெளிநாடுகளில் அதிக வேகத்தில் கார் ஓட்டுவது, பைக் டூர் செல்வது என தனது ஆர்வத்தை காட்டிய வண்ணம் உள்ளார்.
அடுத்து அஜித்தின் விடாமுயற்சி அல்லது குட் பேட் அக்லி படத்தின் அப்டேட் ஏதாவது வரும் என்று பார்த்தால் அவரின் புதிய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது நடிகர் அஜித் புதியதாக Porsche வெள்ளை நிற காரை வாங்கியுள்ளார், காருடன் அஜித் இருக்கும் புகைப்படத்தை நடிகை ஷாலினி தனது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார்.
இந்த Porsche காரின் விலை ரூ. 2 முதல் ரூ. 4 கோடிக்கு இருக்கும் என கூறப்படுகிறது.