நடிகர் அஜித் இந்த பரிசோதனைக்காக தான் மருத்துவமனை சென்றாரா?- வீடியோ இதோ
நடிகர் அஜித்
தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய்க்கு பிறகு பாக்ஸ் ஆபிஸ் நாயகனாக இருப்பவர் நடிகர் அஜித். கடைசியாக இவரது நடிப்பில் துணிவு திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
அப்படத்தை தொடர்ந்து விக்னேஷ் சிவனுடன் இணைவார் என்று எதிர்ப்பார்க்க கடைசியில் மகிழ்திருவேனியை தேர்வு செய்து விடாமுயற்சி என்ற படத்தில் நடித்தும் வருகிறார் அஜித்.
இப்படத்தின் படப்பிடிப்புகள் இதுநாள் வரை அஜர்பைஜானில் நடந்து வந்தது, அங்கு படக்குழுவினருடன் அஜித் எடுத்த புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகிய வண்ணம் இருந்தது.
சமீபத்தில் மகன் பள்ளியில் விளையாட்டு போட்டியில் கலந்துகொண்டது, மகனின் பிறந்தநாளை கொண்டாடியது என நிறைய புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகி வந்தன.
மருத்துவமனை வீடியோ
இந்த நிலையில் நடிகர் அஜித் தனது மனைவியுடன் தனியார் மருத்துவமனை சென்றுள்ளார். இந்த விஷயம் உடனே சமூக வலைதளங்களில் அஜித்திற்கு என்ன ஆனது, ஏன் மருத்துவமனை சென்றார் என பரபரப்பாக பேசப்பட்டது.
ஆனால் உண்மையில் அவர் முதுகு தண்டுவடத்தில் ஏற்பட்ட பாதிப்பு தொடர்பான சிகிச்சைக்காக தான் மருத்துவமனை சென்றுள்ளாராம். அவர் தனது மனைவி ஷாலியுடன் சென்ற வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
AK Sir Visited To Apollo Hospital For Regular Health Check-up... #AjithKumar #VidaaMuyarchi pic.twitter.com/4Pbht78oqU
— Ajith Seenu 2 ? DARK DEVIL... தல..தாய்..தாரம்.. (@ajith_seenu) March 7, 2024