திடீரென நடிகர் அஜித்குமார் மருத்துவமனையில் அனுமதி... ரசிகர்கள் அதிர்ச்சி
நடிகர் அஜித்
நடிகர் அஜித்குமார், தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கி பயணித்து வருபவர்.
சில நாட்களுக்கு முன் அவருக்கு அறிவிக்கப்பட்ட பத்மபூஷன் விருது குடியரசுத் தலைவரால் வழங்கப்பட்டது. விருது வாங்கிய அஜித் சென்னையில் திரும்பிய போது கொடுத்த பேட்டியில், எனக்கு இந்த கிடைக்க ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றி என கூறியிருந்தார்.
நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினியும், தனது கணவர் விருது வாங்கியது பெருமையான விஷயம் என கூறினார்.
தங்களது ஆசை நாயகனுக்கு விருது கிடைத்த சந்தோஷத்தில் ரசிகர்கள் இருக்க ஒரு ஷாக்கிங் தகவல் வந்துள்ளது.
அதாவது நடிகர் அஜித் கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாராம்.
தனது உடல்நல பரிசோதனைக்காக அஜித் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.