விஜய்யை சந்தித்த தல அஜித்.. கூடிய விரைவில் அமையும் கூட்டணி
தமிழ் சினிமாவில் இருந்து பல வருடங்களுக்கு தவிர்க்க முடியாத உயரத்தை அடைந்துள்ளார் நடிகர் அஜித்.
இவர் தற்போது இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் வலிமை எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
வலிமை படத்தை தொடர்ந்து தல அஜித் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்க போகிறார் என்று பேசப்பட்டு வந்தது.
இந்நிலையில் 14 வருடங்களுக்கு பிறகு தல அஜித், இயக்குனர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் தனது 61வது படத்தை நடிக்க போகிறார் என்று சில தகவல்கள் கிசுகிசுக்கப்படுகிறது.
ஆம் வலிமை படத்தின் படப்பிடிப்பில் தல அஜித்தை சந்தித்து படத்தின் கதையை கூறியுள்ளாராம் இயக்குனர் ஏ.எல் விஜய்.
ஆனாலும் இதற்கு முன் ஏ.எல். விஜய் இயக்கத்தில் அஜித் நடித்து வெளியான திரைப்படம் கிரீடம். இப்படம் மக்கள் மத்தியில் பெரியளவில் வரவேற்பு பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சதம் விளாசிய கே.எல் ராகுல்; மேற்கிந்திய தீவுகளுக்கு 352 ஓட்டங்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா News Lankasri
Bigg Boss 10: கோபத்தில் இருந்த விஜய் சேதுபதியை கூலாக மாற்றிய போட்டியாளர்... அப்படியென்ன நடந்தது தெரியுமா? Manithan