தல அஜித் அடுத்தடுத்து நடிக்கும் மூன்று திரைப்படங்கள் - இவர்கள் தான் இயக்குனர்களா
நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் எச். வினோத் இயக்கத்தில் தல அஜித் வலிமை எனும் படத்தில் நடித்து வருகிறார். நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கிய அதே தயாரிப்பாளர் போனி கபூர் தான், இப்படத்தையும் தயாரித்து வருகிறார்.
இந்நிலையில் தல அஜித் அடுத்ததாகவும் இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் தான் நடிக்க விருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
நேர்கொண்ட பார்வை படத்துக்கு பிறகு அஜித் மீண்டும் வினோத் இயக்கும் வலிமை படத்தில் நடித்து வருகிறார். அஜித்தின் 61வது படத்துக்கான திரைக்கதையை வினோத் தயார் செய்து அஜித்திடம் சொன்னதாகவும் அவருக்கு கதை பிடித்துவிட்டதால் நடிக்க சம்மதம் சொல்லி விட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் அஜித் நடிக்க உள்ள மேலும் 2 திரைப்படங்கள் குறித்தும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதில் ஒரு படத்தை சுதா கொங்கரா இயக்குவதாகவும் இன்னொரு படத்தை சிவா இயக்குவதாகவும் சமூக வலைத்தளத்தில் தகவல் பரவி வருகிறது.
இது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமான தகவல் வெளிவரவில்லை என்றாலும், கூடிய விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.