அஜித் அடுத்த படத்திற்கு இத்தனை கோடி சம்பளம் கேட்டுள்ளாரா?- V போல சம்பளத்தில் இப்படியொரு சென்டிமென்ட்டா?

Yathrika
in திரைப்படம்Report this article
நடிகர் அஜித்
நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் முக்கிய நாயகனாக வலம் வருபவர்.
இவர் அடுத்தடுத்து என்ன படங்கள் நடிக்கிறார் என்பதை பார்ப்பதை விட அவர் அடுத்து என்ன விஷயத்தில் அதிக ஆர்வம் காட்டுகிறார் என்பதை காணவே ரசிகர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
பிரியாணி, போட்டோ கிராபி, சமையல், பைக் டூர், துப்பாக்கி சுடுதல், தோட்டம் அமைத்தல் என அடுத்தடுத்து நிறைய விஷயங்களில் ஆர்வம் காட்டுபவர் தற்போது பைக் சுற்றுலாவில் தான் கவனம் செலுத்தி வருகிறர்.
அதேசமயம் தற்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். படத்திற்கான படப்பிடிப்பு வேகமாக அஜர்பைஜானில் இடைவேளை விடப்பட்டு நடந்து வருகிறது.
நடிகர் சம்பளம்
அஜித் ஒவ்வொரு படத்திற்கும் தனது சம்பளத்தை உயத்திய வண்ணம் உள்ளார். தற்போது மகிழ்திருமேனி படத்தை முடித்த கையோடு அஜித் நடிக்க இருக்கும் அடுத்த படத்தின் சம்பள விவரம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது அவர் தனது அடுத்த படத்திற்கு ரூ. 163 கோடி சம்பளம் பெறுகிறாராம். இந்த 3 நம்பரை கூட்டினால் 1 வருமாம், 1 அஜித்தின் ராசியான நம்பராம். V போல சம்பளத்திலும் அஜித்தின் சென்டிமென்ட் தொடர்கிறதா என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.