விளம்பரத்தில் நடிக்க நடிகர் அஜித்குமார் வாங்கும் சம்பளம் எத்தனை கோடி தெரியுமா?... அடேங்கப்பா
நடிகர் அஜித்
தமிழ் சினிமாவின் அல்டிமேட் ஸ்டாராக ரசிகர்களால் கொண்டாடப்படும் முன்னணி நடிகர் தான் அஜித்.
படங்கள் நடிப்பதை தாண்டி மற்ற நிறைய விஷயங்களில் அதிக ஆர்வம் கொண்டவர். கார் ரேஸில் மிகவும் பிடித்த அஜித் இளம் வயதில் நிறைய போட்டிகளில் களமிறங்கியுள்ளார், ஆனால் இடையில் ஏற்பட்ட விபத்து சுத்தமாக கார் ரேஸில் இருந்து விலகினார்.

பின் சமையல், போட்டோ கிராபி, துப்பாக்கி சுடுதல் போன்று நிறைய விஷயங்களில் தனது கவனத்தை செலுத்தி வந்தார். இப்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் கார் ரேஸில் களமிறங்கியுள்ளார்.
வெளிநாடுகளில் நடக்கும் கார் ரேஸ் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றியும் அடைந்து வருகிறார்.

சம்பளம்
படங்கள் நடித்தாலும் இசை வெளியீடு, பட புரொமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாமல் இருந்தார். ஆனால் சமீபத்தில் கேம்ப்பா விளம்பரத்தில் நடித்தது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது.

இப்போது கட்டுமான நிறுவன விளம்பரத்தில் அஜித் நடிக்க கமிட்டாகியுள்ளாராம். அந்த விளம்பரத்திற்காக அவர் ரூ. 25 கோடி சம்பளம் பேசியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹார்முஸ் நீரிணையில் ட்ரம்ப் அறிவித்த 20 சதவீத கட்டணம்., உலக எண்ணெய் வர்த்தகத்தில் அதிரடி மாற்றம் News Lankasri