ரியல் எஸ்டேட் விளம்பரத்தில் நடிக்க நடிகர் அஜித்திற்கு கொடுக்கப்பட்ட சம்பளம்... எத்தனை கோடி தெரியுமா?
நடிகர் அஜித்
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் அஜித்.
கடைசியாக இவர் நடிப்பில் குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகி இருந்தது, அதன்பின் அவர் கார் ரேஸில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் இங்கிலாந்தில் நடைபெற்ற கார் பந்தயத்தில் அஜித்குமார் தனது குழுவினர்களுடன் கலந்துகொண்டார்.

அந்தப் போட்டியில் தமிழக முதல்வரும், நடிகருமான விஜய் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தார். அவர்கள் இருவரும் பல வருடங்கள் கழித்து ஒரே இடத்திற்கு வர அந்த புகைப்படங்கள், வீடியோக்கள் செம வைரலானது.

விளம்பரம்
திரைப்படங்கள் நடித்தாலும் எந்த ஒரு புரொமோஷன் நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளாதவர். மிக நீண்ட காலமாக விளம்பர படங்களிலும் அவர் நடிக்காமல் இருந்தார், ஆனால் இப்போது அப்படி இல்லை.
உலகம் முழுக்க நடைபெறும் கார் பந்தயங்களில் கலந்துகொண்டு வரும் அஜித் விளம்பர படங்களில் நடிப்பதன் மூலம் கார் பந்தய பயிற்சிக்கு தேவையான வருவாயை ஈட்டுகிறார்.

அப்படி அஜித் சமீபத்தில் நடித்த விளம்பர படங்களில் ஒன்று தான் நோவா ரியல் எஸ்டேட் விளம்பரம். இந்த விளம்பர படத்தில் நடிக்க அஜித் எவ்வளவு சம்பளம் வாங்கினார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விளம்பர படத்தில் நடிப்பதற்காக அஜித் ரூ. 40 கோடி சம்பளம் பேசப்பட்டு முதற்கட்டமாக அவருக்கு ரூ. 20 கோடி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Heart Attack: மாரடைப்பின் போது உயிரைக் காப்பாற்ற உதவும் முதலுதவி பற்றி உங்களுக்கு தெரியுமா? Manithan