இணையத்தில் வைரலாகும் நடிகர் அஜித்தின் வாட்சப் ஸ்டேட்டஸ் : ரியல் ஹீரோவின் பதிவு
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் தல அஜித் குமார். இவர் நடிப்பில் கடைசியாக நேர்கொண்ட பார்வை படம் வெளியானது.
மேலும் தற்போது H. வினோத் இயக்கத்தில் இவர் நடித்து முடித்திருக்கும் வலிமை படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது.
போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்தில், ஹிந்தி நடிகை ஹீமா குரேஷி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.
வலிமை படத்தில் அஜித்துடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வளர்ந்து வரும் நடிகரான ராஜ் ஐயப்பா என்பவர்.
இவர் தற்போது நடிகர் அஜித்தின் வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ்-ஐ அவரது சம்மதத்துடன் இணையத்தில் பகிர்ந்திருக்கிறார்.
அதில் " ஏழை நடுத்தர வர்க்கம், பணக்காரன் என்பது ஒரு தனிநபரின் பொருளாதார நிலையை வரையருக்காது. நல்ல மற்றும் கெட்ட மனிதர்கள் சமூகத்தின் ஒவ்வொரு துறையிலும் இருக்கிறார்கள். எனவே ஒரு நபரின் பொருளாதாரத்தை கொண்டு, அவரது குணாதிசியங்களை பதிப்பிடுவது நிறுத்துவதற்கான சிறந்த நேரம் இது. அனைவரும் விழித்து கொள்ளுங்கள் " என்று பதிவிட்டிருக்கிறார் அஜித்.
இதோ அந்த பதிவு..