தல அஜித்தின் டூ - வீலர் லைசென்ஸ் பார்த்துளீர்களா! ரசிகர்களிடையே பரவி வரும் வைரல் போட்டோ
தல அஜித் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்கிவருபவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பெறிய வசூல் சாதனை படைத்து வருகிறது.
அந்த வகையில் இவர் நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை உள்ளிட்ட திரைப்படங்கள் வசூலை குவித்தது.
மேலும் இவர் தற்போது இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் வருகிறார், இப்படத்தை அனைவரும் பெரியளவில் எதிர்பார்த்து வருகின்றனர்.
அந்த வகையில் தல அஜித்தின் ரசிகர்களும் இப்படத்தின் அப்டேட்டை கேட்டு பொது இடங்களில் அட்டகாசம் செய்ததை தொடர்ந்து, இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மே 1 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இணையத்தில் தல அஜித்தின் புகைப்படங்கள் வெளியாகி பரவி வருவது வழக்கம், தற்போது தல அஜித்தின் டூ - வீலர் லைசென்ஸ் புகைப்படம் ஒன்று ரசிகர்களிடையே வேகமாக பரவி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்.