நாக சைதன்யாவை தொடர்ந்து திருமணத்திற்கு ரெடியான அகில் அக்கினேனி.. எப்போது தெரியுமா?
அகில் அக்கினேனி
நடிகர் நாகார்ஜூனாவின் மகன் நாக சைதன்யா, நடிகை சமந்தாவை விவாகரத்து செய்த பின், நடிகை சோபிதா துளிபாலா உடன் காதலில் இருந்து பின் திருமணம் செய்து கொண்டார்.
இவர்கள் திருமணத்தை நாகார்ஜூனா முன் நின்று நடத்தி வைத்தார். இவர்களது திருமணம் ஹைதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டூடியோவில் அரங்கம் அமைக்கப்பட்டு நடைபெற்றது. நாக சைதன்யா இரண்டாம் திருமணத்தில் மிக நெருக்கமானவர்கள் மட்டுமே கலந்து கொண்டு வாழ்த்தினர்.
அதை தொடர்ந்து, நாகார்ஜூனா மற்றும் அமலா ஜோடியின் மகனான அகில் அக்கினேனி திருமண நிச்சயமும் கடந்த ஆண்டு நடைபெற்றது.
அகில் லண்டனை சேர்ந்த Zainab Ravdjee என்பவரை திருமணம் செய்ய இருக்கிறார். Zainab ஒரு ஆர்ட்டிஸ்ட் என்பது குறிப்பிடத்தக்கது.
எப்போது தெரியுமா?
இந்நிலையில், அகில் திருமண தேதி குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, அகில் அக்கினேனி திருமணம் மார்ச் 24, அன்று ஹைதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோவில் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதன் பின், வெளிநாட்டில் மீண்டும் ஒருமுறை திருமணம் செய்யவுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.