நடிகர் அல்லு அர்ஜுன் சொத்து மதிப்பு 2026.. முழு விவரம் இதோ
அல்லு அர்ஜுன்
பான் இந்தியன் ஸ்டாராக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் அல்லு அர்ஜுன். இவருடைய சொத்து மதிப்பு குறித்த விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது, அதைப்பற்றி பார்க்கலாம் வாங்க.

கொனிடேலா - அல்லு குடும்பத்தை சேர்ந்த இவர் தனது இளம் வயதிலேயே சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். முதல் படத்திலிருந்து தன்னுடைய நடிப்பை மெருகேற்றி இன்று இந்திய சினிமாவே கொண்டாடும் நாயகனாக மாறியுள்ளார்.

இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த புஷ்பா 2 திரைப்படம் உலகளவில் ரூ. 1800 கோடிக்கும் மேல் வசூல் செய்தது. இந்த மாபெரும் வெற்றியை தொடர்ந்து அல்லு அர்ஜுன் தற்போது அட்லீயுடன் கைகோர்த்துள்ளார். பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி வரும் இப்படத்தை திரையில் காண ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
பிறந்தநாள்
இன்று நடிகர் அல்லு அர்ஜுனின் பிறந்தநாள். தனது 44வது பிறந்தநாளை கொண்டாடும் இவருக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் அல்லு அர்ஜுனின் சொத்து மதிப்பு குறித்த விவரம் வெளியாகியுள்ளது. இவருடைய மொத்த சொத்து மதிப்பு ரூ. 460 கோடி. ஹைதராபாத்தில் இவருக்கு சொந்தமாக பிரம்மாண்ட வீடு உள்ளது. இந்த வீட்டின் மதிப்பு மட்டுமே ரூ. 100 கோடி ஆகும். மேலும், இவருடைய சம்பளம் ரூ. 270 கோடி முதல் ரூ. 300 கோடி வரை என கூறப்படுகிறது.
லண்டனை உலுக்கிய சம்பவத்தில் புதிய திருப்பம்... தாக்குதலில் ஈடுபட்டவர் மீது கொலை முயற்சி வழக்கு News Lankasri
ஈரானிய ட்ரோன்கள் இனி காற்றில் கரையும்... ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இஸ்ரேல் வழங்கிய ஆயுதம் News Lankasri
புதிய அமைதி பேச்சுவார்த்தையை முன்மொழிந்துள்ள ஈரான்., நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய அமீரகம் News Lankasri