பல்லாயிரம் கோடி சொத்துக்கு சொந்தக்காரர்.. நடிகர் அரவிந்த் சாமியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா
அரவிந்த் சாமி
மணி ரத்னம் இயக்கத்தில் ரஜினிகாந்த் மற்றும் மம்மூட்டி இருவரும் இணைந்து நடித்து வெளிவந்த தளபதி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் அரவிந்த் சாமி. இதன்பின் ரோஜா படத்தின் மூலம் ஹீரோவாக களமிறங்கினார்.
தொடர்ந்து பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்து தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கினார். 2006ஆம் ஆண்டுக்கு பின் சினிமாவில் இருந்து சில ஆண்டுகள் தள்ளி இருந்தார். பின் மீண்டும் மணி ரத்னம் இயக்கத்தில் வெளிவந்த கடல் படத்தின் மூலம் நடிகராக 2013ஆம் ஆண்டு ரீ என்ட்ரி கொடுத்தார்.

கடல் படத்தை தொடர்ந்து மகன் ராஜா இயக்கிய தனி ஒருவன் படத்தில் வில்லனாக நடித்து தமிழ் சினிமாவின் டாப் வில்லன்களில் ஒருவராக இடம்பிடித்தார். மேலும் கடந்த ஆண்டு மெய்யழகன் படத்தில் இவர் ஏற்று நடித்து கதாபாத்திரம் அனைவரையும் கவர்ந்தது. படமும் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது.
பிறந்தநாள்
ரசிகர்களின் மனதை வென்ற சிறந்த நடிகர்களில் ஒருவராக இருக்கும் அரவிந்த் சாமியின் 55வது பிறந்தநாள் இன்று. ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை இவருக்கு சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில், நடிகர் அரவிந்த் சாமியின் சொத்து மதிப்பு குறித்து விவரம் வெளியாகியுள்ளது. சினிமாவை காட்டிலும் பிசினஸில்தான் கோடிகோடியாக சம்பாதித்து வருகிறாராம் நடிகர் அரவிந்த் சாமி. இதனால் ஒரு தொழிலதிபராக பிசினஸில்தான் அதிகம் கவனம் செலுத்தி வருகிறாராம்.
சொத்து மதிப்பு
கடந்த சில ஆண்டுகளின் நிலவரப்படி, அரவிந்த் சாமியின் Talent Maximus நிறுவனத்தின் வருமானம் 412 மில்லியன் டாலர்கள் என கூறப்படுகிறது. இதன் இந்திய மதிப்பு ரூ. 3300 கோடியாகும். மேலும் சினிமா மூலம் வரும் வருமானம், சொகுசு கார்கள், பல கோடி மதிப்புள்ள பங்களாக்கள் என ராஜா வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.

அரவிந்த் சாமியின் சொத்து மதிப்பு குறித்து வெளிவந்துள்ள தகவல், அதிகாரப்பூர்வமானது அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள் News Lankasri
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan