அஜித் ரசிகர்களுக்கு காத்திருக்கும் விருந்து! விடாமுயற்சி ரிலீஸ் குறித்து மாஸ் அப்டேட்
விடாமுயற்சி
ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் திரைப்படம் விடாமுயற்சி. மகிழ் திருமேனி மற்றும் அஜித் கூட்டணியில் உருவாகியுள்ள இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளனர்.
முதல் முறையாக இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்து வருகிறார். மேலும் அஜித்துடன் இணைந்து அர்ஜுன், திரிஷா ஆகியோரும் நடிக்கிறார்கள். மங்காத்தா படத்திற்கு பின் இவர்கள் மூவரும் இணைந்து நடிக்கும் படம் இது.
இவர்கள் மட்டுமின்றி பிக் பாஸ் ஆரவ் மற்றும் ரெஜினா இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். பிக் பாஸ் ஆரவ் இதற்கு முன் மகிழ் திருமேனி இயக்கத்தில் வெளிவந்த கலகத்தலைவன் படத்தில் வில்லனாக நடித்து மிரட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரிலீஸ் எப்போது..?
அனிருத் இசையமைத்துள்ள இப்படத்திலிருந்து இதுவரை போஸ்டர்கள் மட்டுமே வெளிவந்துள்ளது. வருகிற தீபாவளி பண்டிகைக்கு விடாமுயற்சி படம் வெளிவரும் என கூறப்பட்டு வந்த நிலையில், நடிகர் அர்ஜுன் விருது விழா மேடையில் இப்படத்தின் ரிலீஸ் குறித்து வெளிப்படையாக கூறியுள்ளார்.
அதன்படி, விடாமுயற்சி படத்தின் இறுதி சண்டை காட்சியில் இப்போது தான் நடித்து முடித்தேன். படம் வருகிற டிசம்பர் மாதம் வெளியாகும் என கூறியுள்ளார். இது அஜித் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. கண்டிப்பாக டிசம்பர் மாதம் அஜித் ரசிகர்களுக்கு மட்டுமின்றி சினிமா ரசிகர்களுக்கும் மிகப்பெரிய கொண்டாட்ட விருந்து உறுதி.

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
