புதிய சீரியலில் கமிட்டாகியுள்ள பாரதி கண்ணம்மா தொடர் புகழ் அருண் பிரசாத்... முழு விவரம்
அருண் பிரசாத்
விஜய் டிவியில் ஒளிபரப்பான, ஒளிபரப்பாகும் எல்லா சீரியல்களுமே ரசிகர்களிடம் ஹிட் தான்.
அப்படி சில வருடங்களுக்கு முன் வெற்றிகரமாக ஓடிய பாரதி கண்ணம்மா என்ற சீரியல் மூலம் மக்களிடம் மிகவும் பிரபலமானவர் தான் அருண் பிரசாத். தற்போது இந்த தொடர் விஜய் டிவியில் மறு ஒளிபரப்பாகி வருகிறது.
பாரதி கண்ணம்மா சீரியலை முடித்த கையோடு அருண் பிரசாத் சினிமாவில் கொஞ்சம் கேப் எடுத்தார். அதன்பின் பிக்பாஸில் பங்குபெற்றவர் நல்ல விதமாக தான் விளையாடி இருந்தார்.

அந்நிகழ்ச்சிக்கு பிறகு அருண் பிரசாத், சீரியல் நடிகையும், அவரது காதலியுமான அர்ச்சனாவை விஜய் டெலிவிஷன் விருது மேடையில் நிச்சயதார்த்தம் செய்துகொண்டார். இவர்களின் திருமணம் எப்போது நடக்கும் என்பது தெரியவில்லை.
புதிய தொடர்
பாரதி கண்ணம்மா சீரியலுக்கு பிறகு அடுத்து எந்த தொடரிலும் கமிட்டாகாமல் இருந்த அருண் பிரசாத் குறித்து சூப்பர் தகவல் வந்துள்ளது.
அதாவது அருண் மற்றும் ஷிவ் சதீஷ் இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒரு புதிய தொடர் தயாராக உள்ளதாம். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக போகும் இந்த சீரியலை Beyond Cinemas தயாரிக்க உள்ளார்களாம்.