புதிய கார் வாங்கியுள்ள சீரியல் நடிகர் அருண் ராஜன்.. வீடியோ போட்ட பிரபலம், வாழ்த்தும் ரசிகர்கள்
அருண்ராஜன்
தமிழ் சின்னத்திரை நடிகர்கள் பலர் தொடர்ந்து கார்கள் வாங்கி வருகிறார்கள்.
விஜய் டிவி பிரபலம் அமுதவாணன், சீரியல் நடிகை கண்மணி, கயல் சீரியல் நடிகை அபிநவ்யா ஆகியோர் தொடர்ந்து புதிய கார்கள் வாங்கி வந்தனர். அந்த செய்திகளை அவர்களும் வீடியோ எடுத்து இன்ஸ்டாவில் பதிவிட்டு வந்தார்கள்.
அப்படி இப்போது ஒரு நடிகர் புதிய கார் வாங்கிய தகவல் தான் வலம் வருகிறது.
யார் அது
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அழகி என்ற தொடர் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் அருண் ராஜன்.
எந்தவித பின்புலமும் இல்லாமல் மீடியாவிற்குள் நுழைந்தவர் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கண்ட நாள் முதல் தொடரில் நடித்தார்.
தற்போது இவர் ஒரு புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். அந்த புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாவில் வெளியிட ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.