பல சோதனைகளை தாண்டி வெற்றிக்கண்ட நடிகர் அருண் விஜய்யின் சொத்து மதிப்பு... பிறந்தநாள் ஸ்பெஷல்
அருண் விஜய்
பிரபலங்களின் வாரிசுகள் சினிமாவில் களமிறங்குவது வழக்கமான ஒரு விஷயம் தான்.
அப்படி கடந்த 1995ம் ஆண்டு சுந்தர்.சியின் முறை மாப்பிள்ளை படத்தின் மூலம் தனது திரைப்பட பயணத்தை தொடங்கி பின் 1998ம் ஆண்டு துள்ளித் திரிந்த காலம் படத்தின் மூலம் தனது முதல் வெற்றியை கண்டவர் நடிகர் அருண் விஜய்.
கிட்டத்தட்ட 30 வருடங்களாக சினிமாவில் இருக்கும் இவர் குறைவான படங்களில் நடித்திருக்கிறார், அவருக்கு திரும்புமுனை படமாக அமைந்தது அஜித்துடன் நடித்த என்னை அறிந்தால் படம் தான்.
அடுத்து அருண் விஜய் நடிப்பில் வணங்கான் படம் வெளியாக இருக்கிறது.
சொத்து மதிப்பு
அருண் விஜய்க்கு, ஆர்த்தி என்பவருடன் திருமணம் நடக்க இரண்டு குழந்தைகள் உள்ளனர். கார் பிரியரான அருணிடம் மெர்சிடிஸ் பென்ஸ் உள்ளிட்ட உயர் ரக கார்கள் உள்ளன. அவர் BMW 7 சீரிஸ் காரையும் வைத்திருக்கிறார்.
அதன் விலை சுமார் ரூ. 1.65 கோடி. ரூ.46.64 லட்சம் மதிப்புள்ள ஜாகுவார் ஜே.எல்.ஆர். காரும் இவரிடம் உள்ளது. போர்சே, டொயோட்டா ஃபார்ச்சூனர் கார்களும் இவரிடம் உள்ளன.
அதோடு சுமார் 25 லட்சம் மதிப்பிலான சுசுகி ஹையபுசா, ராயல் என்ஃபீல்டு, யமஹா ரே உள்ளிட்ட பைக்குகள் உள்ளன. இன் சினிமாஸ் என்டர்டெயின்மெண்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் வைத்துள்ள இவரின் முழு சொத்து மதிப்பு ரூ. 80 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
