நடிகர் அரவிந்த் சாமியின் இரண்டாவது மனைவியை பார்த்துள்ளீர்களா?- யாருடைய நிகழ்ச்சிக்கு வந்தார் தெரியுமா?
நடிகர் அரவிந்த் சாமி
தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் படங்கள் நடித்து ஒரு காலத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் அரவிந்த் சாமி.
ரோஜா, பம்பாய், மின்சார கனவு, இந்திரா, தேவராகம், அலைபாயுதே என புகழ்பெற்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.
மணிரத்னம் இயக்கிய தளபதி படத்தின் மூலம் இவரது திரைப்பயணம் தொடங்கியது. நடித்துக் கொண்டிருக்கும் போதே திடீரென சினிமாவில் இருந்து விலகி 2000ம் ஆண்டில் இருந்து சொந்த தொழில்களை கவனித்து வந்தார்.
இடையில் 6, 7 வருடங்களாக சினிமா பக்கம் வராமல் இருந்த அவர் 2013ம் ஆண்டு மணிரத்னம் இயக்கிய கடல் படம் மூலம் மீண்டும் நடிக்க வந்து இப்போது ஏகப்பட்ட படங்கள் கமிட்டாகி நடித்து வருகிறார்.
இரண்டாவது மனைவி
அரவிந்த் சாமி 1994ம் ஆண்டு காயத்ரி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார். பின் 2010ம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற 2012ம் ஆண்டு அபர்ணா முகர்ஜி என்பவரை மறுமணம் செய்துகொண்டார்.
தற்போது அரவிந்த் சாமி தனது மனைவி அபர்ணாவுடன் ஜெயம் ரவி மனைவி ஆர்த்தியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டிருக்கிறார்.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
சிறுவயதில் செம கியூட்டாக இருக்கும் இந்த தொலைக்காட்சி பிரபலம் யார் தெரிகிறதா?- அட இவர்தானா