ஜாலிபாய் நடிகர் ஆர்யாவின் சம்பளம், சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா... பிறந்தநாள் ஸ்பெஷல்
நடிகர் ஆர்யா
நடிகர் ஆர்யா, தமிழ் சினிமா கொண்டாடும் ஒரு பிரபலம்.
சினிமாவிற்காக அதாவது ஒரு கதைக்காக தன்னை என்ன செய்ய சொன்னாலும் மறுப்பு இல்லாமல் செய்யக் கூடியவர்.
2005ம் ஆண்டு வெளியான அறிந்தும் அறியாமலும் படத்தின் மூலம் அநிமுகமாகி அவன் இவன், நான் கடவுள், மதராசபட்டினம், சார்பட்டா பரம்பரை, டெடி என நிறைய வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.
நடித்துக் கொண்டிருக்கும் போதே நடிகை சயீஷாவை திருமணம் செய்துகொண்டார், இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.
சொத்து மதிப்பு
இன்று தனது 44வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகர் ஆர்யாவின் மொத்த சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளன. முன்னணி நடிகரான ஆர்யா ஒரு படத்திற்கு 7 முதல் 8 கோடி வரை சம்பளம் வாங்குகிறாராம்.
மாத வருமானம் ரூ. 2 கோடி என்றும் ஆண்டு வருமானம் ரூ. 16 கோடி என்றும் கூறப்படுகிறது. Sea Shell என்று சொந்தமாக உணவகம் வைத்துள்ள ஆர்யாவின் சொத்து மதிப்பு ரூ. 80 முதல் 90 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.