பிரபல நடிகர் ஆசிஷ் வித்யார்தியின் வாழ்க்கை வரலாறு இதோ..
ஆசிஷ் வித்யார்தி
தமிழ் சினிமாவில் எப்போதும் வில்லன்களுக்கு பஞ்சமே இருக்காது. நம்பியாரில் தொடங்கி ரகுவரன், பிரகாஷ்ராஜ் இன்றைக்கு வந்துள்ள பல நடிகர்கள் ஏன் ஹீரோக்களே வில்லனாக நடிக்க முன் வருகிறார்கள். ''
அந்த வகையில் ஆசிஸ் வித்யார்தி வட இந்தியாவில் பிறந்தாலும் தமிழ் சினிமாவில் தில் படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமாகி ஒட்டு மொத்த தமிழ் திரையுலகத்தையும் கலக்கினார்.
அதோடு பாபா படத்தில் இப்போ ராமசாமி என்ற இவரின் கதாபாத்திரம் பட்டி தொட்டியெல்லாம் ரீச் ஆக தமிழில் ஏய், பகவதி, தமிழ், தமிழன் என கலக்கி வந்தார்.
மேலும், வெறும் வில்லனாக மட்டுமில்லாமல் கில்லி படத்தில் விஜய்யின் அப்பாவாக நடிக்க, குணச்சித்திர நடிகராகவும் அசத்தினார்.
நடிப்பு
இவர் ஜுன் 19, 1965-ம் ஆண்டு டெல்லியில் பிற்ந்தவர். நடிப்பு மீதுள்ள ஆர்வத்தால் அது சம்மந்தமான படிப்பை தேடி படித்து தேர்ச்சி பெற்றார். 1991-ம் ஆண்டு கால் சந்தயா என்ற படத்தின் அறிமுகம் ஆன இவர் தற்போது வரை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் 100 கணக்கான படத்தில் நடித்து அசத்தியுள்ளார்.
குடும்பம்
ஆசீஸ் வித்யார்தி தன் முதல் மனைவி ராஜோஸி என்பவரை சமீப்த்தில் தான் விவாகரத்து செய்துவிட்டு ரூபாளி என்பவரை திருமணம் செய்தார். இவருக்கு திருமண வயதில் மகன் இருக்கும் போது இவரை விட மிகவும் வயது குறைந்த பெண்ணை திருமணம் செய்தது சர்ச்சை ஆனது.
ஆனால், அது அவர் தனிப்பட்ட வாழ்க்கை, பல சர்ச்சைகள் இருந்தாலும் சிறந்த நடிகன் என்பதால் அதெல்லாம் ரசிகர்கள் மனதில் ஏற்றவில்லை, இவர் திறமைக்கு பரிசாக 1995-ம் ஆண்டு துரோக்கல் என்ற படத்தில் சிறந்த குணச்சித்திர நடிகருக்கான தேசிய விருதையும் இவர் பெற்றுள்ளார் என்பது கூடுதல் சிறப்பு.