அட பாபி சிம்ஹாவின் மகளுக்கு இப்படியொரு திறமையா?- மிகவும் கியூட்டான வைரல் வீடியோ
பாபி சிம்ஹா
தமிழ் சினிமாவில் எந்தவிதமான கதாபாத்திரம் கொடுத்தாலும் கலக்கியெடுக்கும் நடிகர்களில் ஒருவர் தான் பாபி சிம்ஹா.
ஜிகர்தண்டா திரைப்படத்தில் இவரின் அசால்ட் சேது கதாபாத்திரம் இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
காதலில் சொதப்புவது எப்படி என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் ஜிகர்தண்டா படத்தை தாண்டி பீட்சா, நான் ராஜாவாக போகிறேன், சூது கவ்வும், நேரம், ஜிகர்தண்டா, ஆடமா ஜெயிச்சோமடா உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.
நடிகரின் மகள்
உறுமீன் படத்தில் நடித்த போது நடிகை ரேஷ்மி மேனன் மற்றும் பாபி சிம்ஹா இருவரும் காதலில் விழுந்துள்ளனர். பின் குடும்ப சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்ட இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர்.
நடிகை ரேஷ்மி மேனன் தனது மகள் பரதநாட்டியம் ஆடிய போது எடுத்த கியூட் வீடியோ ஒன்றை இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார்.
அந்த கியூட்டான வீடியோவை பார்த்த ரசிகர்கள் செம கியூட், அழகான பாவனை என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

பிரித்தானியா நோக்கி பறந்த ஏர் இந்தியா விமானம்: கடைசி நேரத்தில் RAT இயக்கப்பட்டதால் பரபரப்பு News Lankasri

அவசர சிகிச்சைப்பிரிவில் தீ... மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எட்டு நோயாளிகள் பலி News Lankasri
