பிழைப்பிற்காக அந்த மாதிரி படங்கள் எல்லாம் நடித்தேன்.. சார்லி ஓபன் டாக்
நடிகர் சார்லி
நடிகர் சார்லி, ஒரு காமெடி நடிகராக தமிழ் சினிமாவில் தன்னை அடையாளப்படுத்தியவர்.
1982ம் ஆண்டு வெளியான பொய்க்கால் குதிரை எனும் படத்தில் அறிமுகமானவர் இன்று வரை நகைச்சுவை, குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
சினிமாவில் நிறைய படங்கள் நடித்தாலும் இவர் 1000க்கும் மேற்பட்ட நாடகங்களையும் நிகழ்த்தியது சிறப்பு.
நடிகரின் பேட்டி
அப்போது எல்லாம் என்னுடைய கதாபாத்திரத்தை எடுத்துவிட்டால் அந்த படத்திற்கு எந்த பாதிப்பும் வராது. ஆனால் பிழைப்புக்காக அந்த மாதிரி படங்கள் எல்லாம் பண்ணி இருக்கிறேன்.
இந்த ரோல் இல்லன்னா அந்த படம் நகராது என்பது போன்ற கதாபாத்திரங்கள் எனக்கு இப்போது தான் வருகிறது, அதனால் தான் நான் காமெடியில இருந்து குணச்சித்திர வேடங்களில் நடிக்க ஆரம்பித்தேன்.
நானும் யோகி பாபுவும் கூர்கா படத்தில் நடித்ததை பார்த்துவிட்டு இதுபோல் படங்கள் நடிங்க என்கிறார்கள், நான் நடிக்க மாட்டேன் என சொல்லவில்லையே. கடவுள் என்ன கொடுக்கிறாரோ அதை நான் செய்கிறேன் என கூறியுள்ளார்.