பிரபல நடிகர் சின்னி ஜெயந்த் வீட்டில் விசேஷம்... குஷியில் பிரபலம் செய்யும் வேலை, வெளிவந்த போட்டோ
சின்னி ஜெயந்த்
பிரபலங்கள் தங்களது வாரிசுகளை சினிமாவில் அறிமுகப்படுத்துவது வழக்கம்.
ஆனால் இந்த பிரபலம் தனது மகனை சினிமாவில் அறிமுகப்படுத்தாமல் மக்களுக்கு சேவை செய்யும் வேலையில் அமர வைத்துள்ளார்.

1984ம் ஆண்டு ரஜினி நடித்த கை கொடுக்கும் கை என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் சின்னி ஜெயந்த்.
40 ஆண்டுகளுக்கு மேலாக குணச்சித்திர நடிகராக பயணித்தவர் கடைசியாக சிங்கப்பூர் சலூன் படத்தில் நடித்தார், இப்போது யோகி பாபுவின் போட் படத்தில் நடித்து வருகிறார்.

பிரபலத்தின் மகன்
தனது மகனை சினிமாவில் களமிறக்குவதற்கு பதிலாக சப் கலெக்டராக்கி அழகு பார்த்திருக்கிறார் சின்னி ஜெயந்த்.
இவருடைய மூத்த மகன் ஸ்ருதன் ஜெய் ஜெயந்த், தொடக்கத்தில் திருப்பூர் மாவட்ட சப் கலெக்டராக பணியாற்றிய, இப்பொழுது விழுப்புரம் மாவட்ட சப் கலெக்டராக பணியாற்றி வருகிறார்.
தற்போது ஸ்ருதன் ஜெய் ஜெயந்திற்கு திருமணம் நடக்கவுள்ளது, திருமண பத்திரிக்கை வேலையில் பிஸியாக இறங்கியுள்ளார் நடிகர் சின்னி ஜெயந்த்.

மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri