80களில் தமிழ் சினிமாவில் கலக்கிய நடிகர் ராஜாவை நியாபகம் இருக்கா?- இப்போது எப்படி உள்ளார் தெரியுமா?
நடிகர் ராஜா
பாரதிராஜா இயக்கத்தில் தமிழ் சினிமாவில் 1994ம் ஆண்டு வெளியான ஒரு திரைப்படம் கருத்தம்மா.
இந்த படத்தின் மூலம் தமிழில் நாயகனாக அறிமுகமானவர் தான் நடிகர் ராஜா. அப்படத்தை தொடர்ந்து இவர் கடலோர கவிதைகள், வேதம் புதிது உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார்.
இவருக்கு முக்கியமாக வேதம் புதிது திரைப்படத்தில் வரும் கண்ணுக்குள் நூறு நிலவா பாடல் மூலம் அதிக கவனம் பெற்றது.
முக்கிய படங்களில் நடித்த ராஜாவிற்கு கல்லூரி மாணவர்கள், பெண்கள் என இவருக்கு ரசிகர்கள் ஏராளம். நாயகனாக மார்க்கெட் குறைய பின் துணை நடிகராக சில படங்களில் நடித்தார்.
லேட்டஸ்ட் க்ளிக்
கடைசியாக இவர் தமிழில் கண்ணுக்கு கண்ணாக மற்றும் ஆதித்யா வர்மாவில் கடைசியாக நடித்திருந்தார். அதன்பின் எந்த தமிழ் படத்திலும் நடிக்கவில்லை.
இந்த நிலையில் இவரது லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வர அட நம்ம ராஜாவா இவர் என லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.