நரைமுடி இருந்தால் என்ன கவலைப்படாமல் அப்படியே திருமணம் செய்த பிரபல நடிகரின் மகள்- வைரல் புகைப்டம்
பெண்கள் எந்த விஷயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்களோ இல்லையோ அழகுக்கு அதிக நேரம் ஒதுக்குகிறார்கள்.
அவர்களுக்காகவே அத்தனை அழகு நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது, எந்த கடையை பார்த்தாலும் பெண்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.
ஆனால் இப்போது ஒரு பிரபல நடிகரின் மகளின் திருமணம் நடந்துள்ளது, இதில் என்ன ஸ்பெஷலான விஷயம் என்றால் மனமகள் தனது நரை முடியை கலரிங் என எதுவும் செய்யாமல் அப்படியே திருமணம் செய்துள்ளார்.
பலரும் ஒன்று, இரண்டு நரை முடி இருந்தாலே அதை மாற்ற நினைக்கும் பெண்களுக்கு நடுவில் தனது திருமணத்தில் நரை முடியுடன் வந்துள்ளாரே என ஆச்சரியமாக பார்க்கின்றனர்.
ஹிந்தி சினிமாவில் நிறைய திரைப்படங்கள், சீரியல்கள் நடித்த நடிகர் திலீப் ஜோஸியின் மகள் நியாதி தான் நரைமுடியுடன் திருமணம் செய்து எல்லோரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.