டெல்லி கணேஷ் என பெயர் வந்தது எப்படி? எவ்வளவு பணம் கொடுத்தாலும் அப்படி மட்டும் நடிக்க மாட்டேன்
நடிகர் டெல்லி கணேஷ் நேற்று இரவு தூக்கத்திலேயே காலாமானார் என்கிற செய்தி தமிழ் சினிமா ரசிகர்கள் மற்றும் பிரபலங்களுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறது.
பெயர் காரணம்
நடிகர் டெல்லி கணேஷ் சினமாவுக்கு வரும் முன்பு 10 ஆண்டுகள் டெல்லியில் இந்திய விமானப் படையில் பணியாற்றி னார். அதற்கு பின் அந்த வேலையை விட்டுவிட்டு நாடகங்களில் நடிக்க ஆர்வமாக வந்துவிட்டார்.
அதுவே அவருக்கு டெல்லி கணேஷ் என பெயர் வர காரணம் ஆக விட்டது.
இறந்த மாதிரி நடிக்க மாட்டேன்
டெல்லி கணேஷ் படங்களில் பிணமாக மட்டும் நடிக்க மாட்டேன் என ஸ்டிரிக்ட் ஆக கூறிவிடுவாராம். நீங்க வேற யாரையாவது படுக்க வெச்சிக்கோங்க என கூறிவிடுவாராம்.
நேரம்
ஷூட்டிங் 8 மணிக்கு என சொன்னால் 7.30 க்கே டெல்லி கணேஷ் மேக்கப் உடன் வந்து நிற்பாராம்.
அதற்காகவே மற்றவர்கள் அவரை பார்த்து பயப்படுவார்களாம்.