நடிகர் டெல்லி கணேஷ் மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகம்

Kathick
in பிரபலங்கள்Report this article
டெல்லி கணேஷ்
தமிழ் சினிமாவில் பழம்பெரும் நடிகர்களில் முக்கியமானவர் டெல்லி கணேஷ். பட்டின பிரவேசம் படத்தின் மூலம் சினிமாவில் நடிக்க துவங்கிய இவர் 45 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்து வருகிறார்.
நாடாக நடிகராக தனது பயணத்தை துவங்கி பின் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்து வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபத்திரங்களில் நடித்து தனக்கென்று தனி இடத்தை பிடித்தார். டப்பிங் கலைஞராகவும் சிறந்து விளங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மரணம்
வெள்ளித்திரை மட்டுமின்றி சின்னத்திரையிலும் நடித்துள்ளார். இந்த நிலையில், தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரமான நடிகர் டெல்லி கணேஷ் மரணமடைந்துள்ளார்.
வயது முதிர்வு மற்றும் உடல்நல குறைவு காரணமாக நடிகர் டெல்லி கணேஷ் காலமாகியுள்ளார். இவருக்கு வயது 80. சென்னை ராமபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் அவருடைய உயிர் பிரிந்துள்ளது.
டெல்லி கணேஷின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. இவருடைய மறைவுக்கு ரசிகர்களும் திரையுலக பிரபலங்களும் தங்களது இரங்கலை சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வருகிறார்கள்.