நடிகர் தனுஷின் 57வது படத்தை இயக்கப்போவது இவரா, நாயகி யார்... செம கூட்டணி, முழு தகவல்
நடிகர் தனுஷ்
நடிகர் தனுஷ், தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு அங்கீகாரத்தை உருவாக்கி சாதனை செய்து வருபவர்.
கடைசியாக தனுஷ் நடிப்பில் ராயன் படம் வெளியாகி இருந்தது, அவரே இயக்கி, நடித்தும் இருந்தார்.
தற்போது ரசிகர்கள் தனுஷ் நடிப்பில் அதிகம் எதிர்ப்பார்ப்பது இட்லி கடை படம். அண்மையில் இப்படத்தில் அருண் விஜய் நடிக்கும் விஷயம் ஃபஸ்ட் லுக்குடன் வெளியாக ரசிகர்கள் இன்னும் ஆர்வமாகிவிட்டனர்.
அடுத்த படம்
தனுஷ் அடுத்தடுத்து நிறைய படங்கள் கமிட்டாகி வர தற்போது ஒரு புதிய தகவல் வலம் வருகிறது.
அதாவது தனுஷின் 57வது படத்தை லப்பர் பந்து என்ற ஹிட் படத்தை கொடுத்த தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் நடிக்க உள்ளாராம். டான் பிக்சர்ஸ் தயாரிக்க நாயகியாக சாய் பல்லவியும், முக்கிய கதாபாத்திரத்தில் அருள்நிதி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

ரூ 24,000 கோடி மதிப்பிலான மாளிகையில் வசிக்கும் பெண்மணி: அவரது குடும்ப சொத்துக்களின் மதிப்பு News Lankasri

Serial update: குணசேகரனுக்கு எதிராக சதிச் செய்யும் கதிர்- வசமாக சிக்கிய மகன்.. அதிகாரியின் அதிரடி Manithan
