அந்த விமர்சனங்களை எல்லாம் கண்டிப்பாக நம்பாதீங்க... தனுஷ் வேண்டுகோள்
இட்லி கடை
தமிழ் சினிமாவில் இருக்கும் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர் தான் நடிகர் தனுஷ்.
இவரது நடிப்பில் கடைசியாக குபேரா திரைப்படம் வெளியாகி இருந்தது, ஆனால் படம் சரியான வரவேற்பை பெறவில்லை.
அடுத்து தனுஷின் நடிப்பில் இட்லி கடை திரைப்படம் தயாராகியுள்ளது, 2 வாரங்களில் வெளியாக உள்ளது. நடிப்பதை தாண்டி இப்படத்தை பார்த்து பார்த்து இயக்கியுள்ள தனுஷிற்கு இயக்குனராக படம் நல்ல வெற்றியை தரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அக்டோபர் 1ம் தேதி வெளியாகும் இட்லி கடை படத்தின் டிரைலர் சமீபத்தில் ரிலீஸ் ஆனது.
தனுஷ் பேச்சு
சமீபத்தில் நடந்த டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசும்போது, படம் 9 மணிக்கு ரிலீஸ் என்றால் 12 மணிக்கு மேலதான் ரிவ்யூஸ் வரும். ஆனால் ஒரு சில ரிவ்யூஸ் 8 மணிக்கே வரும், அப்படி வரும் ரிவ்யூஸ் லாம் நம்பாதீங்க.
நீங்க படத்தை பார்த்துவிட்டு எப்படி இருக்குனு சொல்லுங்க, இல்லை உங்கள் நண்பர்கள் படத்தை பார்த்து என்ன சொல்றாங்கன்னு பாருங்க. சினிமாவை நம்பி பல பேர் இருக்காங்க, பல தொழில்கள் சினிமாவை நம்பி இருக்கு.
அதனால எல்லார் படமும் ஓடணும், அது உங்க கைல தான் இருக்கு. சரியான விமர்சனங்களை பார்த்து அப்படங்களை பார்க்கலாமா ? இல்லையானு ? நீங்க முடிவு பண்ணுங்க என பேசினார் தனுஷ்.