நான் ஒரு தமிழன், தமிழ்நாட்டில் இருந்து வருகிறேன்... தமிழ் மொழி குறித்து தனுஷ் பெருமிதம்
நடிகர் தனுஷ்
நடிகர் தனுஷ், தமிழ் சினிமா பெருமைப்படும் அளவிற்கு இப்போது ஹாலிவுட் வரை வளர்ந்திருக்கும் ஒரு கலைஞன்.
ஆரம்பத்தில் இவர் எல்லாம் ஒரு நடிகரா என்ற விமர்சனத்தை எதிர்க்கொண்டவர் இப்போது சிறந்த நடிகருக்காக பல தேசிய விருதுகளை வென்று வருகிறார்.

கடைசியாக தனுஷ் இயக்கி, நடித்துள்ள இட்லி கடை திரைப்படம் வெளியாகி இருந்தது, படத்திற்கு கலவையான விமர்சனங்கள் தான் வந்தது. இப்படத்தை தொடர்ந்து தனுஷ் ஹிந்தியில் நடித்துள்ள Tere Ishk Mein என்ற படம் விரைவில் வெளியாக உள்ளது.
பேட்டி
அண்மையில் நடிகர் தனுஷ் துபாய் சென்றுள்ளார். அங்கு துபாய் வாட்ச் வீக் நிகழ்வில் கலந்துகொண்டவர் தமிழ் மொழி பற்றி பேசியுள்ளார்.
அதில் அவர், நான் தமிழன், தமிழ்நாட்டில் இருந்து வருகிறேன். தமிழ் உலகின் மூத்த மொழிகளில் ஒன்று பேசியுள்ளார், அவரது பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
