தனுஷ் பிறந்தநாள் ஸ்பெஷலாக தொலைக்காட்சியில் அவரது ஹிட் படங்கள்... முழு விவரம்
நடிகர் தனுஷ்
நடிகர் தனுஷ் இப்போது ஓம் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தை தொடர்ந்து லப்பர் பந்து இயக்குனர் இயக்கத்திலும் வெற்றிமாறன் இயக்கும் தமிழ் முருகன் திரைப்படத்திலும் நடிக்கவுள்ளார். இந்த படங்களை தாண்டி தனுஷ் புதிய கதைகள் கேட்டு வருகிறாராம்.

இன்று ஜுலை 28 நடிகர் தனுஷின் பிறந்தநாள், ரசிகர்கள் பிரபலங்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள். தனது பிறந்தநாளை முன்னிட்டு தனுஷ் கடந்த ஜுலை 26ம் தேதி சில நலத்திட்ட உதவிகளைச் செய்தார்.
அதில் நடிகர் தனுஷ் பேசிய விஷயங்கள் எல்லாம் மிகவும் வைரலானது குறிப்பிடத்தக்கது.
படங்கள்
தனுஷ் பிறந்தநாள் ஸ்பெஷலாக தமிழ் தொலைக்காட்சியில் இவரது படங்கள் இன்று அதிகம் ஒளிபரப்பாகின்றன. அப்படி எந்தெந்த தொலைக்காட்சியில் தனுஷின் என்னென்ன படங்கள் ஒளிபரப்பாகிறது என்பதை காண்போம்.
- விஜய் சூப்பர்- காலை 5.30 மணிக்கு சீடன்
- ஜெயா டிவி- காலை 7 மணிக்கு புதுப்பேட்டை
- விஜய் சூப்பர்- காலை 8 மணிக்கு பா பாண்டி
- விஜய் சூப்பர்- மாலை 3.30 மணிக்கு ஜகமே தந்திரம்
- விஜய் சூப்பர்- மாலை 6 மணிக்கு மாரி
- விஜய் சூப்பர்- இரவு 9 மணிக்கு மாறன்
இன்னும் 1,000 நாட்களுக்குள்... பிரித்தானிய மக்களைத் தயாராக இருக்க அரசாங்கம் வலியுறுத்தல் News Lankasri
எனது பிள்ளைகளை ஒருபோதும் பார்க்க மாட்டீர்கள்: தந்தை தாமஸிற்கு மேகன் மெர்க்கலின் கடைசி கடிதம் News Lankasri