தனுஷ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இருக்கும் சர்ப்ரைஸ் - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
நடிகர் தனுஷ்
தனுஷ் தற்போது இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் "கேப்டன் மில்லர்" படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தின் கதை வரலாற்று பாணியில் உருவாகி வருவதாக சொல்லப்படுகிறது. இதில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதீஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர், சிவராஜ்குமார் என பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார், மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டு வருகிறது.

பிறந்தநாள் ஸ்பெஷல்
இந்நிலையில் தனுஷ் பிறந்த நாளான ஜூன் 28ம் தேதி அன்று ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக "கேப்டன் மில்லர்" படத்தின் டீசரை படக்குழு வெளியிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், அடுத்த வாரத்தில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவரும் என்றும் அதில் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு இருக்கும் என கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரபூர்வமான தகவலுக்காக ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

பெரிய விபரீதத்தில் இருந்து உயிர் தப்பிய தொகுப்பாளினி ரம்யா- அவரே வெளியிட்ட போட்டோ